Wednesday, October 29, 2008

புத்தளத்தில் பொலிஸ் பதிவு

On Behalf Of Muzaffir
Sent: Tuesday, 28 October, 2008 12:37 PM
To: Puttalam Group
Subject:
புத்தளத்தில் பொலிஸ் பதிவு

 

வடக்கிலிருந்து வந்து புத்தளத்தில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வதியும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று புத்தளம், முந்தல், கல்பிட்டி, ஆனமடுவ, மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்றது. வடக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 2004ம் ஆண்டுக்குப் பின் இங்க வந்தவர்களே இவ்வாறு பதிவுக்குட்படுத்தப்பட்டனர்.

 

2004ம் ஆண்டுக்கு முன்னர் வந்து வசிப்பவர்களுடன் புதிதாக 2004ம் ஆண்டுக்குப் பின் வந்து இணைந்து கொண்டவர்களும் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என வேண்டப்பட்டனர். இதன்படி புத்தளம் சென் அன்றூஸ் மகா வித்தியாலயம், முந்தல் பொலிஸ் பிரிவில் கரிக்கட்டி இடம்பெயர்ந்தோர் முகாம் மற்றும் சிரிமாபுரம் முகாம் ஆகிய வற்றில் மக்கள் தம்மைப் பதிவு செய்ய வருகை தந்தனர். கல்பிட்டி, ஆனமடுவ, வண்ணாத்திவில்லு, பள்ளம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் இவ்வாறான பதிவுகள் நேற்று நடைபெற்றன.

 

இந்தப் பதிவுகள் நடைபெற்ற இடத்திற்கு வடமேல் மாகாண மேற்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சாந்த ராஜபக்ஷ, புத்தளம் பிரதி பொலிஸ் அத்தியட்கசர் சுகதபால மற்றும் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் வருகை தந்து பதிவுகளை பார்வையிட்டனர். பதிவுகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலுமுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்கனைச் சேர்ந்தோர் பொலிசாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

 

நேற்றை பொலிஸ் பதிவு நடவடிக்கையின் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.

 



No comments:

Subscribe

Google Groups
Subscribe to Puttalam / புத்தளம்
Email:
Visit this group

Puttalam Photos & News Collection Google Group