Wednesday, October 29, 2008

புத்தளத்தில் பொலிஸ் பதிவு

On Behalf Of Muzaffir
Sent: Tuesday, 28 October, 2008 12:37 PM
To: Puttalam Group
Subject:
புத்தளத்தில் பொலிஸ் பதிவு

 

வடக்கிலிருந்து வந்து புத்தளத்தில் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வதியும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று புத்தளம், முந்தல், கல்பிட்டி, ஆனமடுவ, மற்றும் வண்ணாத்திவில்லு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நடைபெற்றது. வடக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 2004ம் ஆண்டுக்குப் பின் இங்க வந்தவர்களே இவ்வாறு பதிவுக்குட்படுத்தப்பட்டனர்.

 

2004ம் ஆண்டுக்கு முன்னர் வந்து வசிப்பவர்களுடன் புதிதாக 2004ம் ஆண்டுக்குப் பின் வந்து இணைந்து கொண்டவர்களும் தம்மைப் பதிவு செய்ய வேண்டும் என வேண்டப்பட்டனர். இதன்படி புத்தளம் சென் அன்றூஸ் மகா வித்தியாலயம், முந்தல் பொலிஸ் பிரிவில் கரிக்கட்டி இடம்பெயர்ந்தோர் முகாம் மற்றும் சிரிமாபுரம் முகாம் ஆகிய வற்றில் மக்கள் தம்மைப் பதிவு செய்ய வருகை தந்தனர். கல்பிட்டி, ஆனமடுவ, வண்ணாத்திவில்லு, பள்ளம ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் இவ்வாறான பதிவுகள் நேற்று நடைபெற்றன.

 

இந்தப் பதிவுகள் நடைபெற்ற இடத்திற்கு வடமேல் மாகாண மேற்கு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சாந்த ராஜபக்ஷ, புத்தளம் பிரதி பொலிஸ் அத்தியட்கசர் சுகதபால மற்றும் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் வருகை தந்து பதிவுகளை பார்வையிட்டனர். பதிவுகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலுமுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்கனைச் சேர்ந்தோர் பொலிசாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

 

நேற்றை பொலிஸ் பதிவு நடவடிக்கையின் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.

 



Thursday, October 23, 2008

பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் புத்தளம் விஜயம்

 

 

இலங்கையின் பிரித்தானியாவின் உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெய்ஸ் மற்றும் புத்தளத்தில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் பிரதிநிதிகள் மற்றும் புத்தளம் உள்ளுர் பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று புத்தளத்தில் இடம்பெற்றது. பிரித்தானியா உயர் ஸ்தானிகர் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு புத்தளம் வந்த போதே இச்சந்திப்பு இடம்பெற்றது.

 

இவ்விஜயத்தின் போது வடக்கு முஸ்லிம்களுக்கான சமாதான செயலக ஆணையாளர் எம். கே. எம். முஹைஸ் தலைமையிலான உயர் அதிகாரிகளைச் சந்தித்து இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் தொடர்பில் வடக்கு முஸ்லிம்களின் சமாதானச் செயலகத்தின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையானார். இதனையடுத்து புத்தளத்தில் இயங்கும் சமூக நம்பிக்கை நிதியத்தின் (சீடிஎப்) ஏற்பாட்டில் புத்தளம் பாலாவி இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள் வாழும் மலீஹாபுரம் முகாமுக்கு விஜயம் செய்த உயர் ஸ்தானிகர் அங்கு பெண்கள் அபிவஜருத்திச் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதன்போது அவர்களின் பிரச்சினைகள், தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். இவ்விஜயத்தின் போது சமூக நம்பிக்கை நிதியத்தின் திட்டப் பணிப்பாளர் மிஹ்லார் மலிக், உதவிப் பணிப்பாளர்களான மெளலவி நிஹ்மதுல்லாஹ், ஏ. சி. எம். சபீர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

இதனையடுத்து புத்தளம் மொஹிதீன் ஜூம்ஆப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து புத்தளம் உள்ளுர் பிரதிநிகளுடனான சந்திப்பில் உயர் ஸ்தானிகர் கலந்து கொண்டார். புத்தளத்தில் இடம்பெயர்ந்த மற்றும் உள்ளுர் மக்களுக்கிடையில் காணப்படும் உறவுகள் கறித்தும் ஏனைய விடயங்கள் கறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பில் புத்தளம் பெரிய பள்ளியின் பிரதம நம்பிக்கையாளர் எஸ். ஆர். எம். முஸம்மில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் மாவட்டத் தலைவர் மௌலவி அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் சமாதான செலயகத்தின் புத்தளம் மாவட்டப் பொறுப்பாளர் எஸ். என். எல். சுகைல்புத்தளம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ். ஆர். எம். ஹினாயத்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

உயர் ஸ்தானிகரின் புத்தளம் விஜயத்தின் போது புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்னாண்டோ உட்பட பல அரச உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசினார்.

 

 

எம். எஸ். முஸப்பிர்

மதுரங்குளி நிருபர்

17. 10. 2008
 

 

Puttalam visit of Brithis high commissioner



---------- Forwarded message ----------
From: Muzaffir <msmuzaffir@gmail.com>
Date: 2008/10/24
Subject: [Puttalam Photos] Puttalam visit of Brithis high commissioner







புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் பீட்டர் ஹெயிஸ் சமூக நம்பிக்கை நிதியத்தின் அழைப்பில் பாலாவி மலீஹாபுரம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு விஜயம் செய்த போது சிறுவர் ஒருவரால் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், அங்கு பெண்கள் அபிவிருத்திச் சங்கத்துடனான கலந்துரையாடலில் ஈடுபட்டிருப்பதையும், சமூக நம்பிக்கை நிதிய அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆவணம் ஒன்றைப் பார்வையிடுவதையும் அருகில் உயர் ஸ்தானிகரின் மனைவி அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்.
 
எம். எஸ். எம். முஸப்பிர்

-

பால் விற்பனை நிலையம் பாலாவியில்



---------- Forwarded message ----------
From: Muzaffir <msmuzaffir@gmail.com>
Date: 2008/10/24
Subject: [Puttalam Photos] பால் விற்பனை நிலையம் பாலாவியில்





கால்நடைகள் வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸின் ஏற்பாட்டில் புத்தளம் பாலாவி நகரில் தேசிய பாற்பண்ணை அபிவிருத்தி சபையின் பால் மற்றும் உற்பத்திப் பொருட்கள் விற்பணை நிலையம் ஒன்று கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. புத்தளம் பிரதேச சபையின் உப தலைவர் சிந்தக நாடாவை வெட்டி நிலையத்தைத் திறந்து வைப்பதையும், பிரதி அமைச்சர் அங்கிருந்தோருக்கு இலவசமாக பால் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
 
(எம். எஸ். முஸப்பிர்
 



Wednesday, October 22, 2008

மதுரங்குளி பிரதேசத்தில் வெள்ளம்

2

 


From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Wednesday, 22 October, 2008 4:38 PM

Subject:
மதுரங்குளி பிரதேசத்தில் வெள்ளம்

 

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டு பல குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் வேறு பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீதிகளிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மதுரங்குளி நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. அனேக கடைகள் மூடிக்கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மதுரங்குளி பிரதேசத்தை அண்டிய பல பகுதிகளில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராததால் பாடசாலைகளும் இயங்கவில்லை.

 

நேற்று (22.10.2008) பகல் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி பிரதேசத்தில் நீர் சுமார் 2 அடி மட்டத்தில் பாய்ந்து சென்றதையும், கடைகளுக்குள் நீர் புகுந்திருப்பதையும், பாலாவி பிரதேசத்தில் பல வீடுகள் நீரில் முழ்கியுள்ளதையும், மதுரங்குளி விருதோடை பிரதான வீதியின் பாலம் நீரில் முழ்கி பொக்குவரத்து தடைபட்டுள்ளதையும், விருதோடை மற்றும் பல பகுதிகளில் வீதிகள் நீரில் முழ்கியுள்ளதையும் படங்களி்ல் காணலாம்.

 

மதுரங்குளி பிரதேசத்தில் வெள்ளம்

 

 


From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Wednesday, 22 October, 2008 4:38 PM
Subject:
மதுரங்குளி பிரதேசத்தில் வெள்ளம்

 

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டு பல குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் வேறு பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீதிகளிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மதுரங்குளி நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. அனேக கடைகள் மூடிக்கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மதுரங்குளி பிரதேசத்தை அண்டிய பல பகுதிகளில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராததால் பாடசாலைகளும் இயங்கவில்லை.

 

நேற்று (22.10.2008) பகல் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி பிரதேசத்தில் நீர் சுமார் 2 அடி மட்டத்தில் பாய்ந்து சென்றதையும், கடைகளுக்குள் நீர் புகுந்திருப்பதையும், பாலாவி பிரதேசத்தில் பல வீடுகள் நீரில் முழ்கியுள்ளதையும், மதுரங்குளி விருதோடை பிரதான வீதியின் பாலம் நீரில் முழ்கி பொக்குவரத்து தடைபட்டுள்ளதையும், விருதோடை மற்றும் பல பகுதிகளில் வீதிகள் நீரில் முழ்கியுள்ளதையும் படங்களி்ல் காணலாம்.

 

Tuesday, October 21, 2008

From Irshad - Puttalam News Group

2

 


From: Sarafath [mailto:saraf@thegrantongroup.com]
Sent: Wednesday, 22 October, 2008 8:09 AM
To: Rifai Eng.; Abbas; Abbas Ramzy; Abdul Latheef Mohamed Aswerkhan; Abdul Nasar; abulkalm asiqmohamed; ASIQ; F. Rahman; fayas px gmail; ihthishaam@yahoo.com; ikram inamun; minhasm@star.lk; mohamed riyas; muhazzam; muhazzam mohamad; NOORIL AMEEN; NOORUL AMEEN; rinoos; Riysi Sadikeen
Subject: From Irshad - Puttalam News Group

 

 

 

 

 


pls check the attachments

 


From Irshad - Puttalam News Group

From Irshad - Puttalam News Group

 


From: Sarafath [mailto:saraf@thegrantongroup.com]
Sent: Wednesday, 22 October, 2008 8:09 AM
To:
Subject: From Irshad - Puttalam News Group

 

 

 


pls check the attachments

 


Subscribe

Google Groups
Subscribe to Puttalam / புத்தளம்
Email:
Visit this group

Puttalam Photos & News Collection Google Group