Showing posts with label புத்தளம். Show all posts
Showing posts with label புத்தளம். Show all posts

Monday, April 20, 2009

மரம் சரிந்து வீழ்ந்தது.

புத்தளம் குருநாகல் வீதியில் மக்கள் வங்கியின் முன்னால் இருந்த பாரிய
மரம் ஒன்று நேற்று முன்தினம் வீசிய காற்றினால் சரிந்து வீழ்ந்தது. இதனால்
நேற்று காலை சற்று நேரம் பாதைப் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர்
சீக்கிரத்திலேயே இம்மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு பாதை சீர்
செய்யப்பட்டது.

எம். எஸ். முஸப்பிர்

புத்தளத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும் புத்தளம் மன்னார்
வீதியின் புனரமைப்புப் பணிகள் தாமதப்படுவதற்குக் எதிர்ப்புத்
தெரிவித்தும், புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தக் கோரியும்
புத்தளம் பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் கிளை, பாடசாலை
அபிவிருத்திச் சங்கம் என்பன இணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது
பிடிக்கப்பட்ட படங்கள்

படங்கள் - மதுரங்குளி நிருபர்



எம். எஸ். முஸப்பிர்
மதுரங்குளி நிருபர்
06. 04. 2009

Thursday, March 12, 2009

புலமைப்பரிசில் மாணவர்கள் கைளரவிப்பு

2008ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்ட மாணவர்களைக் கௌரவிக்கும் உலக இஸ்லாமிய வாலிபர் இயக்கத்தின் அனுசரணையுடன் கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த வைபவம் கடந்த செவ்வாய்க்கிழமை புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற போது வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழியில் அதிகூடிய புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற கல்கமுவ முஸ்லிம் மாதிரி வித்தியாலய மாணவி ரிபா பரீட்டுக்கு பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் விஷேட நினைவுச் சின்னம் வழங்கி கைளரவிப்பதையும், அங்கு இடம்பெற்ற ஏனைய மாணவர்களின் கௌரவிப்பு மற்றும் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

 

 எம். எஸ். முஸப்பிர்

12. 03. 2009


Sunday, January 18, 2009

FW: முதலாம் தரத்திற்கு மாணவர்கள் சேர்க்கும் நிகழ்வு

 

From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Monday, 19 January, 2009 7:11 AM

இவ்வாண்டு பாடசாலைகளுக்கு மாணவாகளைச் சேர்த்துக் கொள்ளும் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. புத்தளம் ஸெய்னப் முஸ்லிம் மகளிர் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற வைபவத்தின் போது புதிய மாணவிகளை இரண்டாம் தர மாணவிகள் மாலை அணிவித்து வரவேற்பதையும், மாணவிகள் வரவேற்பு கீதம் பாடுவதையும், கல்வி அதிகாரி இஸட். ஏ. சன்ஹிர் உரையாற்றுவதையும், இடம்பெற்ற கலைநிகழ்வில் ஒன்றையும் படங்களில் காணலாம்.

 

 

எம். எஸ். முஸப்பிர்

புத்தளத்தில் ஐ.தே.க. காரியாலயம் திறந்து வைப்பு

From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Monday, 19 January, 2009 7:10 AM

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் பிரசார காரியாலம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை புத்தளம் மரைக்கார் வீதியில் திறந்து வைக்கப்பட்டது. பாலித ரங்கே பண்டார எம். பி, புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் எல். எம். ஐயுப்கான் ஆகியோருடன் பலர் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா ஜோன் அமரதுங்க இக்காரியாலயத் திறக்க ஆயத்தமாவதையும், அவர் அங்கு உரை நிகழ்த்துவதையும் படங்களில் காணலாம்.

 

 

எம். எஸ். முஸப்பிர்

Sunday, January 11, 2009

புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

From: Muzaffir
Sent: Saturday, January 10, 2009 7:00 AM

 

பலஸ்தீன காசா பிரதேச அப்பாவி முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் நடாத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து புத்தளம் பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா  புத்தளம் கிளை உட்பட பல்வேறு அமைப்புக்கள் இணைந்து நேற்று புத்தளத்தில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது. கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் போது சட்டத்தரணி கமறுதீன் உரையாற்றுவதையும் ஏனைய ஆர்ப்பாட்டக்காட்சிகளையும் படங்களில் காணலாம்.

 

(படங்கள் - மதுரங்குளி நிருபர்)

 

எம். எஸ். முஸப்பிர்

மதுரங்குளி நிருபர்

09. 01. 2009



Saturday, January 3, 2009

புத்தளத்தில் இரத்த தான வைபவம்

From: Muzaffir
Sent: Friday, 26 December, 2008 4:53 AM

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி நிறுவனமும் புத்தளம் முகைதீன் ஜூம்ஆப் (பெரிய) பள்ளியும் இணைந்து ஏற்பாடு செய்த புத்தளம் தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு இரத்த தானம் செய்யும் வைபவம் அண்மையில் புத்தளம் குவைட் வைத்தியசாலையில் இடம்பெற்றது. சுமார் 140 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

 

இத்ன் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.

 

விருதோடை முஸப்பிர்



புத்தளத்தில் வேட்பு மனுத்தாக்கல்

From: Muzaffir
Sent: Thursday, 01 January, 2009 8:40 AM

எதிர்வரும்  வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காகப் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஆறு அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை நேற்று (புதன்) புத்தளம் மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தன. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி தலைமை வேட்பாளர் எல். எம். ஐயுப்கான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, ஜோன் அமரதுங்க, வேட்பாளர் கிங்ஸ்லி லால் பெனாந்து ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் கச்சேரி வளாகத்தில் வெளியேறுவதையும், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான எஸ். ஏ. எஹியா, எஸ். எச். எம். நியாஸ் ஆகியோர் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரத்தனவுடன் உரையாடுவதையும், எம்.எஸ்.எம். பைசல் தலைமையிலான சுயேட்சைக் குழுவினர் மனுத்தாக்கல் செய்ய வருகை தருவதையும் படங்களில் காணலாம்.

 

 

 

எம். எஸ். முஸப்பிர்



Tuesday, December 30, 2008

புத்தளத்தில் வேட்பு மனுத்தாக்கல்

From: Muzaffir
Sent: Wednesday, 31 December, 2008 2:14 PM

நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காக இன்று (செவ்வாய்) மேலும் மூன்று அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக்குழுவும் தமது வேட்பு மனுக்களை புத்தளம் மாவட்டச் செயலகத்தில் புத்தளம் தெரிவத்தாட்சி அலுவலர் எம். கிங்ஸ்லி பெர்ணான்டோவிடம் கையளித்துள்ளன. ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, சமாஜவாதி சமாஜ கட்சி என்பனவே இன்று மனுத்தாக்கல் செய்த அரசியல் கட்சிகளாகும்.

 

நேற்று நண்பகல் வரை ஒரு அரசியல் கட்சியும் மூன்று சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. ஐக்கிய சோஷலிச முன்னணியே நேற்றுவரை வேட்பு மனுச் செய்த அரசியல் கட்சியாகும். இத்தேர்தலில் போட்டியிட மொத்தம் பத்து சுயேட்சைக் குழுக்கள் இன்று நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்தியிருந்தன.

 

இன்று அரச தரப்பு வேட்பு மனுவை அமைச்சர் மில்ரோய் பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் ஆகியோர் தாக்கல் செய்தனர். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து அரச தரப்புக்கு மாறிய முன்னாள் வடமேல் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக வடிகமங்காவ தலைமையிலான வேட்பாளர்களில் மூன்று முஸ்லிம்கள் அடங்குகின்றனர். முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என். டி. எம் தாஹிர், முன்னாள் கல்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ. எச். எம். றியாஸ் மற்றும் சட்டத்தரணி ஏ. எம். கமறுதீன் ஆகியோரே அம்மூன்று முஸ்லிம் வேட்பாளர்களாவர்.

 

ஏனைய அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் நாளை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.



Friday, December 26, 2008

புத்தளத்தில் கிரிஸ்மஸ் நிகழ்வு


From: Muzaffir <msmuzaffir@gmail.com>
Date: 2008/12/26

புத்தளம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த நத்தார் தின விஷேட நிகழ்வு நேற்று புத்தளம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்ணான்டோ பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கிரிஸ்த்தவ பாதிரி பீட்டர் ஹேமபிரிய ஆராதணை நிகழ்த்தினார்.  புத்தளம் பிரதேச செயலாளர் ஏ. சீ. எம். நபீல், உதவி பிரதேச செயலாளர் எம். ரசிக, உட்பட அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

 

இதன் போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.

 

விருதோடை முஸப்பிர்



 

 

Friday, December 19, 2008

MILK SHOP

 

Tag - Puttalam Srilanka.  புத்தளம்   லங்கா  இலங்கை

 

MILK SHOP

 

Tag - Puttalam Srilanka.  புத்தளம்   லங்கா  இலங்கை

 

Uppuththalam - Oct 2008

 

 

 

Tag - Puttalam Srilanka.  புத்தளம்  லங்கா  இலங்கை

Subscribe

Google Groups
Subscribe to Puttalam / புத்தளம்
Email:
Visit this group

Puttalam Photos & News Collection Google Group