2
From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Wednesday, 22 October, 2008 4:38 PM
Subject: மதுரங்குளி பிரதேசத்தில் வெள்ளம்
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் பல பிரதேசங்களில் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்பட்டு பல குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளிலும் வேறு பாதுகாப்பான இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீதிகளிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மதுரங்குளி நகரில் கடைகள் திறக்கப்படவில்லை. அனேக கடைகள் மூடிக்கிடந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மதுரங்குளி பிரதேசத்தை அண்டிய பல பகுதிகளில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராததால் பாடசாலைகளும் இயங்கவில்லை.
நேற்று (22.10.2008) பகல் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் தில்லையடி பிரதேசத்தில் நீர் சுமார் 2 அடி மட்டத்தில் பாய்ந்து சென்றதையும், கடைகளுக்குள் நீர் புகுந்திருப்பதையும், பாலாவி பிரதேசத்தில் பல வீடுகள் நீரில் முழ்கியுள்ளதையும், மதுரங்குளி விருதோடை பிரதான வீதியின் பாலம் நீரில் முழ்கி பொக்குவரத்து தடைபட்டுள்ளதையும், விருதோடை மற்றும் பல பகுதிகளில் வீதிகள் நீரில் முழ்கியுள்ளதையும் படங்களி்ல் காணலாம்.
No comments:
Post a Comment