From: Muzaffir
Sent: Saturday, January 10, 2009 7:00 AM
பலஸ்தீன காசா பிரதேச அப்பாவி முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் நடாத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து புத்தளம் பெரிய பள்ளி, ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளை உட்பட பல்வேறு அமைப்புக்கள் இணைந்து நேற்று புத்தளத்தில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது. கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் போது சட்டத்தரணி கமறுதீன் உரையாற்றுவதையும் ஏனைய ஆர்ப்பாட்டக்காட்சிகளையும் படங்களில் காணலாம்.
(படங்கள் - மதுரங்குளி நிருபர்)
எம். எஸ். முஸப்பிர்
மதுரங்குளி நிருபர்
09. 01. 2009
No comments:
Post a Comment