From: Muzaffir
Sent: Thursday, 01 January, 2009 8:40 AM
எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்காகப் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஆறு அரசியல் கட்சிகளும் ஒன்பது சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பு மனுக்களை நேற்று (புதன்) புத்தளம் மாவட்டச் செயலகத்தில் தாக்கல் செய்தன. இதன்போது ஐக்கிய தேசிய கட்சி தலைமை வேட்பாளர் எல். எம். ஐயுப்கான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, ஜோன் அமரதுங்க, வேட்பாளர் கிங்ஸ்லி லால் பெனாந்து ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்த பின் கச்சேரி வளாகத்தில் வெளியேறுவதையும், முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களான எஸ். ஏ. எஹியா, எஸ். எச். எம். நியாஸ் ஆகியோர் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரத்தனவுடன் உரையாடுவதையும், எம்.எஸ்.எம். பைசல் தலைமையிலான சுயேட்சைக் குழுவினர் மனுத்தாக்கல் செய்ய வருகை தருவதையும் படங்களில் காணலாம்.
எம். எஸ். முஸப்பிர்
No comments:
Post a Comment