ஹம்பந்தோட்டை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச முன்னெடுத்துவரும் செமட செத (அனைவருக்கும் ஆறுதல்) எனும் வேலைத் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு வங்கி சேமிப்பு கணக்கு ஆரம்பித்து அதன் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை வணாத்திவில்லு பௌத்த விகாரையில் இடம்பெற்றது. வணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மூன்று இனங்களையும் சேர்ந்த 100 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வங்கி வைப்புச் செய்யப்பட்டு அதற்கான சேமிப்புப் புத்தகங்கள் அம்மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.
இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, காமினி ஜயவிக்ரம பெரேரா, திருமதி லெரின் பெரேரா, புத்தளம் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர்களான எம். ஐயுப்கான், கிங்ஸ்லி லால், புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சியின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் ஏ. ஆர். எம். ரபாத் அமீன் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
படங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மாணவர்களுக்கு வைப்புப் புத்தகம் உட்பட பரிசுப் பொருட்கள் வழங்குவதையும், அவர் மற்றும் பாலித ரங்கே பண்டார எம். பி ஆகியோர் உரையாற்றுவதையும் காணலாம்.
எம். எஸ். முஸப்பிர்
No comments:
Post a Comment