From: Muzaffir
Sent: Monday, 01 December, 2008 12:53 AM
இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் செய்னப் முஸ்லிம் பெண்கள் ஆரம்ப பாடசாலை, அதன் முதல் வருடத்திலேயே நடைபெற்ற 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 41 மாணவிகள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர். இவ்வாறு சித்தியடைந்த மாணவிகளையும் பரீட்சையில் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவிகளையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை 29. 11. 2008) புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது. கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ்வைபவத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக், கொழும்பு மாவட்ட நீதிபதி முஹம்மட் மக்கீன் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கான பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
இவ்வைபவத்தின் போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
பாத்திமா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் வரவேற்பு கீதம் பாடுகின்றனர்.
செய்னப் மாணவிகளின் கலாசார நடனம்
செய்னப் பாடசாலையில் கூடிய புள்ளிகளைப் பெற்ற எம். எஸ். பாத்திமா சாஜிதா (153 புள்ளிகள்) என்ற மாணவிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சூக் சான்றிதழ் மற்றும் பரிசில்களை வழங்குகிறார்.
சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு பிரதி அமைச்சர் பாயிஸ் சான்றிதழ் மற்றும் பரிசில்களை வழங்குகிறார்.
சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு பிரதி கல்விப் பணிப்பாளர் ஜவாத் மரைக்கார் சான்றிதழ் மற்றும் பரிசில்களை வழங்குகிறார்.
(ஏனைய படங்கள் தொடர்கின்றன)
எம். எஸ். முஸப்பிர்.
No comments:
Post a Comment