From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Monday, 07 July, 2008 8:52 AM
Subject: புத்தளத்தின் நவீன பஸ் தரிப்பிடம்
புத்தளம் நகர சபையினால் 740 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நவீன பிரதான பஸ் தரிப்பிடம் மற்றும் நவீன வசதிகளைக் கொண்ட சுப்பர் மார்க்கட் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நடும் வைபவம் அண்மையில் புத்தளம் நகர முதல்வர் எம். என். எம். நஸ்மி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வடமேல் மாகாண முதலமைச்சர் அத்துல விஜேசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லை நட்டி வைத்தார்.
பிரதி அமைச்சர் கே. ஏ. பாயிஸ், அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, பிரதி அமைச்சர் தயாசிரித திசேரா, மாகாண அமைச்சர் விக்டர் எண்டனி பெரேரா, பாராளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரட்ன, வடமேல் மாகாண சபை உறுப்பினர் என். டி. தாஹிர், முன்னாள் மாகான அமைச்சர் எம். எச். எம். நவவி உட்பட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுப்பர் மார்க்கட் மற்றும் பஸ் தரிப்பிடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது. அந்நிகழ்வின் படங்கள் கீழே.
(படப்பிடிப்பு - விருதோடை முஸப்பிர்)
ஊடகவியலாளர்
No comments:
Post a Comment