Thanks to Ali Simak
15 th April 2009
Tag - Puttalam Srilanka. புத்தளம் லங்கா இலங்கை
Puttalam புத்தளம் Puttalam புத்தளம் Puttalam புத்தளம் Puttalam புத்தளம் Puttalam புத்தளம் Puttalam புத்தளம் Puttalam புத்தளம் Puttalam
From: Muzaffir [mailto:msmuzaffir@gmail.com]
Sent: Monday, 08 June, 2009 5:36 AM
ஜனாதிபதி முப்படையினருக்கு ஆதரவாக கல்பிட்டி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம் கடந்த 30 வருட பயங்கரவாதத்தை மூன்றே வருடங்களில் பூண்டோடு தீரத்துடன் அழித்து இலங்கையில் நிரந்தர சமாதானம் மலர வழி வகுத்த ஜனாதிபதிக்கும், அரசுக்கும் முப்படை மற்றும் பொலிஸாருக்கும் பாராட்டு, நன்றி தெரிவித்து கல்பிட்டி பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 28ந் திகதி கல்பிட்டி பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் தலைவர் எம். எஸ். சேகு அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் தலைவரால் முன்வைக்கப்பட்ட கல்பிட்டி பிரதேச மக்கள் சார்பான இப்பிரேரணையை சபை ஏகமனதாக ஆமோதித்தது. சபையின் 14 உறுப்பினர்களில் 13 பேர் சமுகமளித்திருந்தனர். தலைவரின் உரையில் நாட்டுக்காக தியாகத்தில் ஊனமுற்ற, நோய்வாய்ப்பட்ட படை வீரர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகவும், கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வதியும் முப்படையையும் சேர்ந்த வீரர்களை கெளரவிக்கும் நிகழ்வு சபையால் விரைவில் முன்னெடுக்கப்படும். யுத்த செலவு தற்போது அற்ற நிலையில் நாடு துரிதமாக அபிவிருத்தி அடையும். எமது கல்பிட்டி பிரதேச அபிவிருத்திக்கு மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காண்கின்றோம். இவ்வபிவிருத்திப் பயணத்தில் அரசுக்கான எமது பூரண ஆதரவை வழங்குவோம் என்றார். (ஐ- ந) |
|
Subscribe to Puttalam / புத்தளம் |
Visit this group |