மதுரங்குளி விருதோடையில் அமைந்துள்ள அல்பாஸ் இன்டர்நெசனல் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தையொட்டி கலைவிழா நிகழ்ச்சிகள் நேற்று (வெள்ளிக்கிழமை 28. 11. 2008) மாலை விருதோடை அல்பாஸ் பாடசாலை முற்றவெளியில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. முந்தல் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் எம். ஆர். எம். மலிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இவ்விழாவில் பல்வேறு அதிதிகள் கலந்து கொண்டனர். பாடசாலை ஆரம்பித்த முதல் வருடத்திலேயே அதன் மாணவர்கள் காட்டிய திறமைகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்ததுடன் பாராட்டையும் பெற்றது.
இதன் போது பிடிக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.
எம். எஸ். முஸப்பிர்
29. 11. 2008

No comments:
Post a Comment